Show all

திமுக 174 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டி!

திமுக கூட்டணியில் இதுவரை 11 கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக கூட்டணியில் இன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் முதலாவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், காங்கிரசுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 

நேற்று, ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கப்பட்டன.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனான தொகுதிப் பங்கீடு மட்டும் முடிவடையாமல் இருந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை 11 கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான தொகுதி எனக் கூறப்படுகிறது.

இதில் சிறிய கட்சிகள் எல்லாம் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.