இந்திய வரலாற்றில் திமுகவிற்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை வகுப்பதில் இந்தியாவின் முன்னோடி திமுக. திமுகதான் இந்தியாவில் மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளுக்கு முன்மாதிரி. இந்தத் தேர்தலுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவாதம் அளித்திருக்கிறது திமுக. ஆம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000. 25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் நலத்திட்டங்களை வகுப்பதில் இந்தியாவின் முன்னோடி திமுக. திமுகதான் இந்தியாவில் மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளுக்கு முன்மாதிரி. அந்த வழியிலேயே, எம்ஜியார் அதிமுகவைத் தோற்றுவித்து தமிழகத்தில் திமுகவிற்கு போட்டியாக செயலாற்றி வந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் செயலலிதாவும் சோடை போகவில்லை. தற்போது எடப்பாடி பன்னீர் தலைமையில் இருக்கிற அதிமுக, தங்களை ஆட்சியில் தக்கவைக்கும் நோக்கத்திற்கு உதவிய ஒன்றிய பாஜக அதிகாரத்திற்கு நன்றிக் கடனாக- தமிழகத்தின் வரிவாங்கும் அதிகாரம், குடும்ப அட்டை அதிகாரம் தொடங்கி பலவற்றை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. சமூகநீதி, மாநில அடையாளங்களைக் குழிதோண்டி புதைக்கும் நோக்கத்திற்கான கட்சியான பாஜகவிற்கு கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுத் தரும் நோக்கத்திற்காக பாஜகவை கூட்டணியிலும் இணைத்துக் கொண்டிருக்கிறது தற்போதைய அதிமுக நிருவாகம். இதனால் பாஜக ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்பொழுது திமுகவின் கடமையாகியுள்ளது. திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம், ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் 350 ஏக்கரில் அமரும் அளவுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது 10 ஆண்டுகளுக்கான உறுதிமொழி என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்தார் ஸ்டாலின். அதில் 7 உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்கிற உறுதிமொழி திமுக வெற்றியை அடித்துத் தூக்கப் போவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க உறுதிமொழியாகும். இந்த அறிவிப்பு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவின் முதன்மையான ஓட்டுவங்கி பெண்கள்தான். எம்ஜிஆர், அதன்பிறகு செயலலிதா ஆகிய இருவருக்கும் கிராமப்புற பெண்களிடையே பெரிய அளவுக்கு ஆதரவு இருந்தது. இதன் காரணமாகத்தான், திமுகவை விட, அதிமுக வாக்கு வங்கி எப்போதுமே 5 முதல் 9 விழுக்காடு என்ற அளவுக்கு அதிகமாகவே இருக்கும். இப்போது, அந்த வாக்கு வங்கியை இந்த உறுதிமொழி குறிவைத்து உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த வாக்கு வங்கியை கைப்பற்றி விட்டால் ஏற்கனவே திமுக வலுவாக இருக்கக்கூடிய நகர்ப்புறங்கள் மற்றும் நடுத்தர வசதியுடைய மக்கள், அரசு ஊழியர்கள் அரசு ஆதரவும் சேர்ந்தால் திமுகவுக்கு வெற்றி எளிதாகக் கிடைக்கும் என்பதை அவர்கள் கணிப்பாக இருக்கிறது. அதேநேரம், இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே கட்டாயத்தேவையான திட்டம் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். பிரேசில் போன்ற நாடுகளில் ஊக்கத்தொகை வழங்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், தற்போது மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாத காலகட்டம். அரசு நேரடியாக மக்களுக்கு பணத்தை வழங்க வேண்டும், அப்போதுதான், பொருளாதாரம் மீட்சி அடையும் என்று ஒன்றியபாஜக அரசுக்கு பல்வேறு பொருளாதார வல்லுனர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, பெட்ரோல் டீசல், எரிவாயு உருளை போன்ற கட்டாயத்தேவைப் பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளன. அந்தக் கட்சிக்குத்தான், தமிழகத்தில் துண்டு போட்டு இடம்பிடிக்கும் வேலையைத் தற்போதைய அதிமுக நிருவாகம் செய்து கொண்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற பொருளாதார அறிஞர்கள் கேள்விக்கு, ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதியோர் ஓய்வு ஊதியம், கைம்பெண் ஓய்வூதியம் போன்றவற்றைக் கொண்டு வந்தபோதும் இப்படித்தான் கேள்வி எழுந்தது. ஆனால் அதை கலைஞர் செயல்படுத்தினார். இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்க முடியுமா என்றும் கேள்வி எழுந்தது. அதையும் கலைஞர் வழங்கினார். என்கிற திமுகவின் வரலாறு அவர்களுக்கு விடையாக அமைகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.