‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்பதன் ஹிந்தி பெயரில், செவ்வாய்க் கிழமை இரவு 8மணிக்கு தொலைக்காட்சியில் மோடி அறிவித்து, இன்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்த, கொரோனா நிவரண உதவித் தொகுப்பான இருபது இலட்சம் கோடி- தொழில் நிறுவனங்களில் நடுவண் அரசு 4ஆண்டுகளுக்கு வட்டி வருமானம் பெறுவதற்கான முதலீடு என்று அறிய முடிகின்றது. 30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவலால் உண்டாகியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக இந்திய அரசு ஏற்கனவே அறிவித்த உதவித்தொகுப்பு, இந்திய கட்டுப்பாட்டு வங்கி அறிவித்த உதவித் தொகுப்பு மற்றும் தற்போதைய உதவித் தொகுப்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 10விழுக்காடு என்று மோடி தனது எட்டுமணி தொலைக்காட்சி உரையின்போது கூறினார். இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி ஆற்றிய, அந்த இரவு எட்டுமணி தொலைக்காட்சி உரையின்போது அறிவித்த, ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அந்தத் திட்டத்தின் பெயரை நேற்று தலைமைஅமைச்சர் ஹிந்தியில் தெரிவித்ததால், அந்த ஹிந்திப் பெயர், கூகுள் தேடலில் நேற்று தலைமை இடம் பெற்றது. காங்கிரஸ் காலத்தில் இந்திராகாந்தி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘சுயவேலைவாய்ப்புத் திட்டம்’ போல பெயரளவில் மோடியின் ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ இருந்தாலும் உள்ளடக்கம்- காங்கிரஸ் காலத்தில் இந்திராகாந்தி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘சுயவேலைவாய்ப்புத் திட்டம்’ போல அவ்வளவு பயன் சார்ந்ததாக இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அ. இந்திராகாந்தி அவர்கள் கடன் வழங்கியதைப் போலவே இவர்களும் கடன் வழங்குகிறார்கள். மற்ற படி நடுவண் அரசின் கொரோனா பரவலால் உண்டாகியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக உதவித் தொகுப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்பதில்: ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கும் தொழிலாளர் வைப்பு நிதித் தொகையை நடுவண் அரசு செலுத்தும். இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள், 72.25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்தத் தொகையை அரசே செலுத்துவதால், நிறுவனங்களுக்கு ரூ.6,500 கோடி மிச்சமாகும். இந்தத் தொகையையும் அரசு அவர்கள் கையில் கொடுக்கப் போவதில்லை. அவர்கள் கணக்கில் வைப்பு வைத்துக் கொள்ளும். இந்த இலவசத்தைத் தவிர வேறு இலவசமோ, ஏழை மக்களுக்கான இழப்பீடோ, கடன்களுக்கான மானியமோ எதுவும் இல்லை. நிறுவனங்களுக்கு கொடுக்கவிருக்கிற கடன் அரசுக்கான வட்டி வருமானம் பெறுவதற்கான முதலீடு அவ்வளவே. அதற்குத்தான் இந்த வீணாய் போன நடுவண் அரசின் திட்டத்திற்கு ஹிந்தியில் பெயர். இரண்டு நாட்கள் நீடித்த வெட்டி அலப்பறைகள்.
ஆ. இந்திராகாந்தி அவர்கள் புதிய தொழில் தொடங்குவதற்குப் படித்த இளைஞர்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் ஒரு இலட்சம் வரை ஓர்ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து கடன் வழங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கு அடமானம் இல்லையென்றாலும் நிறுவனத்தின் தகுதி அடிப்படையில் கடன் வழங்குகிறார்கள். அதுவும் வெறுமனே ஐந்து மாதங்கள் மட்டும்.
இ. இந்திராகாந்தி அவர்கள் வழங்கிய கடனில் 30விழுக்காடு மானியம் இருந்தது. இவர்கள் வழங்கும் கடனுக்கு மானியம் இல்லை.
ஈ. இந்திராகாந்தி அவர்கள் கடன் வழங்கிய போது, அரசின் சார்பாக கொடுக்கப்பட்ட பாதிப்பு நெருக்கடிக்கு இழப்பீடாக அந்தக் கடனை வழங்கவேண்டிய தேவை எழவில்லை. தற்போதைய அரசு மக்கள் விலைகொடுப்பில் முன்னெடுத்த ஊரடங்கு மக்களுக்கு பெரும்பாதிப்பாகும்.
உ. இந்திரா காந்தி அவர்கள் படித்த சுயதொழில் தொடங்க ஆர்வம் உடைய அனைவருக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் வழங்கியதால் அதில் பயன்படுவோர் என்கிற சரத்ததுக்கள் எதுவும் இடம்பெற வில்லை. தற்போதைய அரசு, 'நடந்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு' கடன் வழங்குவதால் ஏகப்பட்ட சரத்துக்கள் இடம் பெறுகின்றன. இன்றைக்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த சரத்துக்களைத்தான் 15 புள்ளிகளாக பட்டியல் இட்டிருந்தார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



