மோடி தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18,வைகாசி ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை வழக்கமாக இயக்கப்படும் தொடர்வண்டி சேவைகளைத் தொடங்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் தொடர்வண்டித்துறை, டெல்லி-சென்னை மற்றும் சென்னை-டெல்லி ராஜ்தானி விரைவுவண்டி இன்றிலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. மோடி தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18,வைகாசி ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை வழக்கமாக இயக்கப்படும் தொடர்வண்டி சேவைகளைத் தொடங்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோரிக்கையை ஏற்று, வருகிற 18,வைகாசி ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை தொடர்வண்டி போக்குவரத்து கிடையாது என்றும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட 2 தொடர்வண்டிகள் மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி தொடர்வண்டியில் உள்ள அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி உள்ளதாகவும், ராஜ்தானி தொடர்வண்டியில் சுமார் 1,100 பயணிகள் வரை பயணம் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட இந்தத் தொடர்வண்டிகள் மூலம் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து தொடர்வண்டி பயணிகளையும் கொரோனா பரிசோதனை செய்துதாம் தமிழ்நாட்டிற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு, இந்த தொடர்வண்டிகள் மூலம் வரும் பயணிகளைத் தொடர்வண்டித்துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும், அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனையிலும், தொற்று இல்லாதவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் மற்றும் தொடர்வண்டித்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



