Show all

அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது தமிழகம்! ரூ.25 லட்சம் தொடர்வண்டி கட்டணம் செலுத்தி பீகார், ஜார்கண்ட் தொழிலாளர்களை வெற்றிகரமாக

ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3வது 4வது அணுஉலைகளின் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதில் பீகார், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். 

நடுவண் அரசு முன்னெடுத்த, நிவாரணம் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கால் இவர்களுக்கு வேலையும் சம்பளமும் வழங்கவியலாத தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் இவர்களின் உணவுச்செலவை மட்டும் கவனித்து வந்தன. 

இதனால் அவர்கள் செலவுக்கோ, ஊருக்கு அனுப்பவோ பணம் ஏதும் இல்லாத நிலையில், தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும்படி அணுஉலை வளாகத்தில் போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர். காவல்துறை ஆய்வாளர் உட்பட இருவருக்கு காயம் ஏற்பட்டது. 

இவர்களை அவர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப, தமிழக அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பலனாக, திருநெல்வேலியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சிறப்பு தொடர்வண்டி இயக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கான பயணக்கட்டணத்திற்கு நடுவண் அரசு பொறுப்பெடுக்கவில்லை. 

ஆனாலும் தமிழக அரசின் இடைவிடாத முயற்சியிலும் செலவிலும், இந்த அணுஉலை தொழிலாளர்கள், தூத்துக்குடி நிறுவன தொழிலாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 345 பேர் அனுப்பப்பட்டனர்.

இதற்காக கூடங்குளத்தில் இருந்து தமிழகஅரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். அணுமின்நிலையத்தில் தொழிலாளர்கள் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வந்திருந்தார்கள். இருப்பினும் தற்போதைய செலவு உணவு, குடிநீர், ஒரு பயணிக்கு கட்டணச்சீட்டு 995 ரூபாய் வீதம் 25 லட்சம் ரூபாய் செலவுகளை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்களே செலுத்தின.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.