Show all

என்ன சிக்கல் குஷ்புவுக்கு! திமுக, காங்கிரசுக்கு பிறகு மூன்றாவது கட்சியாக பாஜகவுக்கு தாவும் முயற்சியில்

ஒவ்வொரு கட்சியும் தொடங்கப்படுவதற்கும், அதில் பலர் இணைவதற்கும் ஒரு கொள்கை அடிப்படை இருக்கவே செய்யும். ஆனால் இடையில் கட்சி மாறுவதற்கு கட்சி மாறுகிறவருக்கு எதாவது ஆதாயம் இருக்கும். அதுவும் வீழ்ந்த கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறினால் மாறுகிறவர் எதாவது சிக்கலில் உள்ளார் என்பது கட்சிமாற்றத்தின் அடிப்படையாக இருக்கும் விதியாகும். 

26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக, காங்கிரசுக்கு பிறகு மூன்றாவது கட்சியாக பாஜகவுக்குத் தாவும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர் குஷ்பு. 

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்த திரைப்பட நடிகை குஷ்பு மீண்டும் கட்சி மாறி பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லி புறப்பட்டுச் சென்ற குஷ்பு இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் சேர இருக்கின்றாராம்.

கடந்த சில நாட்களாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்தத் தகவலை, அண்மையில் காங்கிரசின் போராட்டத்தில் பங்கேற்று ஆவேசமாக பேசிய குஷ்பு செய்தியாளர்களிடம் மறுத்திருந்தார். அத்துடன் தான் காங்கிரசில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது எனவும் கூறியிருந்தார்.

கடந்த கிழமை டெல்லி சென்று திரும்பிய குஷ்பு, நேற்று இரவு 9.30 மணிக்கு மீண்டும் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது பாஜகவில் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவரது கணவரும், திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி அவருடன் சென்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.