கொரோனாவைச் சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மை வகித்து வந்த கேரளாவில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பரவியபோது அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்மாதிரியாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஏனெனில் கொரோனாவைச் சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மை வகித்தது கேரளா. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொடர்பான நேற்றைய விவரத்தை அம்மாநில நலங்குத்துறை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலின் படி, மாநிலத்தில் புதிய உச்சமாக நேன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 95 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 570 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. நேற்றும் கொரோனா தாக்குதலுக்கு இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 978 ஆக அதிகரித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



