பல்வேறு எதிர்ப்புகள், மாணவர்கள் பலர் கலந்து கொள்ள முடியாத நிலை ஆகியவற்றோடு அடாவடியாக ஒன்றிய பாஜக அரசால் முன்னெடுக்க அந்த நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரப்பாட்டு ntaneet.nic.in என்ற இணையத்தில் அனுமதி அட்டையில் இருக்கும் வரிசை எண்ணை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வு முடிவுகளை வரிசை எண் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு எழுதிய மாணவ மாணவியர்கள் கட்டாயம் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுவது நல்லது. தேர்வு எழுதியவர்களில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோர், மலைச்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு 40 விழுக்காடும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பபை வெளிநாடுகளில் தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. நீட் தேர்வின் ‘வெட்டுப்பாட்டு மதிப்பெண்’ தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை, மொத்த காலியிடங்கள், வினாத்தாளின் கடினம், இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தேர்வு நடந்து இருந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. ஒன்றியத் தேர்வு ஆணையம் மதிப்பெண், வரிசைஎண் ஆகியவற்றை அறிவிக்கிறது. ஒன்றிய நலங்கு மற்றும் குடும்பநலத்துறை கலந்துரையாடல் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



