சீனாவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று ஒரு தகவலை பாஜக கையில் எடுத்திருக்கிறது. கொரோனா மற்றும் எல்லை நடவடிக்கைகளை கடுமையாக கேள்வி எழுப்பிவரும் காங்கிரசை எதிர்கொள்ள. 12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி வரப்பெற்றுள்ளது என்று பாஜக வியாழனன்று காங்கிரஸ் மீது ஒரு குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது. நடுவண் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மத்தியப் பிரதேச மெய்நிகர் பேரணியில் ஜே.பி.நட்டாவுடன் சேர்ந்து காங்கிரஸை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்பது காங்கிரஸ் கட்சியின் ஒரு நீட்சிதான் என்று ரவிசங்கர் பிரசாத் அறுதியிட்டார். காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியா-சீனா இடையே சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்க ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஊக்கவிப்பதற்காக இந்த நிதி வழங்கப்பட்டது என்ற யுகத்தை முன்வைத்திருக்கிறார். சீனாவுடனான சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்க சீனா ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு லஞ்சமாக நிதியளித்ததா? காங்கிரஸ் தலைமை ஐமுகூ ஆட்சியில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 33 மடங்கு அதிகரித்தது, அதற்குத்தான் லஞ்சமாக நிதியா? என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். இனி இந்தக் குற்றச்சாட்டை பாஜகவினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையாக கட்டுமானம் செய்து காங்கிரசை தேசத்துரோக கட்சியாக அடையாளப் படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். ஆக நடப்பு நிலை கொரோனா பேரிடர் குறித்து அவர்கள் பேசவே மாட்டார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



