தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 45 பேர் உயிரிழந்த சோகமும் இன்றைய நாளுக்கு உரியது. தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக இருந்த போதும், இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக இருக்கிற நிலையில்; தமிழ்நாடு கொரோனாவிற்கு அஞ்சத் தேவையில்லை என்கிற நம்பிக்கை தருவதான சூழ்நிலையே நிலவுகிறது. ஆனாலும் பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ள சோகம், அகவை முதிர்ந்தவர்களை சிறப்பாக தனிமைப் படுத்துவதில் இன்னும் கூடுதல் கவனத்தை செயல்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாகிறது. தமிழக நலங்குத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 70,977 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,543 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய நாள் வரையில் தமிழகத்தில் 10,08,974 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று அரசு மருத்துவமனையில் 29 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 45 பேர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



