ரபேல் வழக்கின் மீதான மறுசீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், விசாரணைக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அறங்கூற்றுவர்கள் அமர்வு நேற்று தெரிவித்துள்ள நிலையில்- ரபேல் பேர ஊழலை மறைக்கும் முயற்சிக்காகவே தேசிய பாதுகாப்பு என்ற நாடகத்தை மோடி நடத்தியிருக்கிறார் என்ற நடிப்பு நாட்டு மக்களுக்கு அம்பலமாகி விட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் வழக்கின் மீதான மறுசீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், விசாரணைக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அறங்கூற்றுவர்கள் அமர்வு நேற்று தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தற்போதுதாம், கொஞ்சம் துணிச்சலாக மோடிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி, உச்ச அறங்கூற்றுமன்றத்தின் மூலம் பாஜக அரசு மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் மோடி அவர்களே! நீங்கள் முடிந்த அளவுக்கு பொய் சொல்லலாம். ஆனால், உண்மை தாமதமானாலும் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியுள்ளார். மேலும், ரபேல் ஊழலில் ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இதுக்கு மேல் மறைத்து வைப்பதற்கு ரகசியங்கள் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். மோடி அவர்களே! கவலைப்படாதீர்கள், நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் விசாரணை நடக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இந்தியாவில் நேரடியாக ஊழலில் ஈடுபட்ட முதல் இந்தியத் தலைமை அமைச்சர், என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் என்று நிரூபணம் ஆகவிருக்கிறாரா மோடி, என்று அவரது அப்பாவி ஆதரவாளர்களே மூக்கின் மீது விரல் வைக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



