இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள். அதில் வேகமாக முன்னெடுக்க வேண்டியது என்று கருதிய ஒரு செய்தி மட்டும் இப்போதைக்கு. 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று ஆயுஷ் துறையினரிடம் பேசியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். சீனம் வுகானுக்கு மட்டும் 2000 சீனமுறை மரபு மருத்துவர்களை அனுப்பியதும் அவர்களது QPD கசாயம் முதலுதவி செய்ததும் பதிவாகி உள்ளதே, நிலவேம்போ, கபசுரகுடிநீரோ அவர்கள் சொல்வதை அறிஞர் கூட்டத்தைக்கொண்டு ஆலோசித்து நாடெங்கும் ஊற்றி நம்பிக்கையைக் கொடுங்களேன். வலியுடன் காத்திருக்கும் கூட்டத்துக்கு அக்கசாயம், நோய் எதிர்ப்பாற்றலை மட்டுமன்று பெரிய உளவியல் உறுதியையும் சேர்த்தல்லவா தரும்?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



