மதுரை மக்கள் வீட்டில் இருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக 100 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன. 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியிலும், நொய்டாவிலும் புலம்பெயர் மக்கள் வாடகை கொடுக்க முடியாமல் ஊரைக் காலி செய்வதும், கெஜ்ரிவால் நாங்கள் அப்புறமா வாடகை கொடுக்கிறோம் என்பதும், நொய்டா ஆட்சியர் வீட்டைக் காலிசெய்யச் சொன்னால் இரண்டு ஆண்டு சிறை என்று அறிவித்து மக்களை அலைகழித்து ஊரடங்கை அலங்கோலப் படுத்தி வரும் நிலையில், தமிழக அரசோடு நமக்கு ஆயிரம் கருத்து முரண்கள் இருந்த போதும் இந்த ஊரடங்கை இலாவகமாக கையாளுவது பாராட்டிற்கு உரியதே. மதுரை மக்கள் வீட்டில் இருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக 100 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன. மாட்டுத்தாவணியில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கீழச்சந்தை வீதி தயிர் சந்தை, கீழமாசி வீதி காய்கறி சந்தை இன்று முதல் மூடப்படுகின்றன. இங்கிருந்த சில்லறை கடைகளை 14 இடங்களில் பிரித்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய இடங்களில் அன்றாடம் காலை 6:00 முதல் 10:00 மணி வரை காய்கறி வாங்கலாம். ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் மாநகராட்சியில் உள்ள 100 ஊர்ப்பகுதிகளுக்கும் தலா ஒரு நடமாடும் காய்கறி கடை வீதம் 100 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை மாநகராட்சி, காவல்துறையினர் எடுத்துள்ளனர். வைகை ஆற்றுக்கு வடக்குப்பகுதியில் இருப்பவர்கள் தெற்கு பகுதிக்கும், தெற்கு பகுதியில் இருப்பவர்கள் வடக்கு பகுதிக்கும் காய்கறி வாங்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



