Show all

கொரோனா பரிசோதனை!

கொரோனா இருப்பது உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான்.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய, Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR) என்ற பரிசோதனை செய்யப் படுகிறது. இதற்கு, நோயாளி மூக்கின் உட்பகுதியிலும் தொண்டையின் உட்பகுதியிலும் இரண்டு இணை மாதிரிகள் எடுக்கப்படும். ஒன்று, அங்கேயே பரிசோதிக்கப்படும். இன்னொன்று, புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியியல் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். கொரோனா இருப்பது உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான்.

தமிழகத்தில் சென்னை, தேனி, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது.

தமிழகத்திலும்- வேலூர் கிறுத்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை அப்போலோ ஆய்வகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாத நிலையில், தனியார் ஆய்வகங்கள் ரூ.4500 கட்டணமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்பு காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டனர். அவர்களிடமும் பயண வரலாறும் கேட்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் இந்த விதி மாற்றப்பட்டுள்ளது. நுண்ணுயிரி தொற்றும் ஆபத்தான சூழலில் நோயாளிகளுடன் இருந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அனைவருமே பரிசோதிக்கப் படுகிறார்கள்.

கொரோனா பரிசோதனை எங்கெங்கு செய்யலாம் எனப் பரிசீலித்து அனுமதி அளிப்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர்தான். இந்தியா முழுக்க 116 ஆய்வகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட், சென்னை மருத்துவக் கல்லூரி, தேனி, நெல்லை, திருவாரூர், சேலம், கோவை, திருச்சி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. வருங்காலங்களில் தேவை அதிகம் எழும் என்பதால், தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் அனுமதி தரப்படுகிறது. இந்தியா முழுவதும் 60 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.