தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலங்கானா, கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம், மஹாராஷ்ட்ரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார். தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன், கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, ராஜஸ்தான் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா, மஹாராஷ்டிரம் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,262.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.