இயங்கலை மூலமாக நேற்று மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு பதிகை செய்துள்ளதாக இந்திய நேரிடை வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயங்கலை மூலமாக நேற்று மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு பதிகை செய்துள்ளதாக இந்திய நேரிடை வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் வருமான வரி பதிகை செய்துள்ளது இதுவே முதல் முறை. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. நேற்று ஒரு மணி நேரத்தில் மட்டும் சராசரியாக 2.05 லட்சம் பேரும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 8,500 பேரும், விநாடிக்கு 142 பேரும் வருமானவரி கணக்கினை பதிகை செய்துள்ளதாக தெரிகிறது அழகாக நடைபோட்டு வரும் குடும்ப அமைப்பு நேர்த்தியானது. பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்விப்பது என்கிற பிள்ளைகளுக்கான கடமைகள் அனைத்தும் பெற்றோர்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது. அவற்றுக்கான பொருளைப் பெற்றோர்கள் தொழில் மூலமாகவே ஈட்டுகின்றனர். நடப்பில் நம்மைப் பிணைத்துக் கொண்டுள்ள இற்றைச் சமுதாய அமைப்புமுறை தொழில் செய்து வருமானம் ஈட்டிய போதும் தம்மக்களின் உழைப்பைச் சுரண்ட வரியும் விதித்து மிரட்டி ஊடகங்களில் விளம்பரம்செய்து கடுமையாக வசூலிக்கவும் செய்து அதையும் ஆளும்பாழும் வீணடிக்கிறது. உலக வங்கியில் கடனும் வாங்குகிறது. மாதிரிச்சமுதாயமான குடும்பத்தில் பிள்ளைகளைப் பெற்றோர் தம் தொழில் வருமானத்தில் சிறப்பாகப் பேணுவதோடு, சமுதாயத்திற்கு வரியும் செலுத்தும் இந்த சாதனைகளை யெல்லாம் செய்து சாதிக்கும் போது பெரியகுடும்பமான சமுதாய அமைப்புமுறையால் சாதிக்க முடியாதா என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் தலைமைஅமைச்சராக மோடி பதவியேற்கும் போது, ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 60.51 ஆகும். இன்று காலை ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 71.74 ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் தரும் 18விழுக்காடு சரக்கு-சேவைவரி, வருமான வரி, மக்களுக்கு கிடைக்கிற பரிசுத்தொகைகளில் 30 விழுக்காடு வருமானம், தொழில்வருமானம், நடிகர்கள் தரும் கொள்ளை வருமானம், அலைக்கற்றை நிறுவனங்கள் தரும் வருமானம், காப்பீட்டு நிறுவனங்கள் தரும் வருமானம், எல்லாவற்றுக்கும் மேலாக சாராய வணிகத்தின் மூலமான வருமானம் அப்பப்பா என்னதான் செய்கிறது அரசு? மக்கள் தங்கள் குடும்பத்திற்காக அழுவதை விட, அரசுக்காக மிகவும் அழுகின்றார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,262.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.