பாஜக அரசின் புதிய வாகனச் சட்டம், நள்ளிரவு 12மணியிலிருந்து அமலான நிலையில், பழைய சட்ட நடைமுறையின் போதே, நான்கு சக்கர சொகுசு வாகன உரிமையாளர் தலைக்கவசம் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டு, அறங்கூற்றுமன்றம், காவல்துறை ஆணையர் அலுவலகம் என்று அல்லாடும் செய்தி: இன்றைய தலைப்பாகி மக்களிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பி வருகிறது. 15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயர்அறங்கூற்றுமன்ற வழக்கறிஞரான பரணீஸ்வரன்: சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது மனைவி நந்தினி பெயரில் கார் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நந்தினி செல்பேசிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு சேதி வந்துள்ளது. அதில் அன்று மதியம் 1.15 மணிக்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே உள்ள சாலையில் பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது தலைக்கவசம் அணியாததால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நந்தினி, இதனை கண்டு, நடக்காத செய்தியாக இருக்கிறதே என்று அதிர்ச்சி அடைந்துள்ளார். அதே சமயம் நந்தினி, வாகன எண், முகவரி எல்லாம் சரியாக இருப்பதை பார்த்து மேலும் குழப்பம் அடைந்துள்ளார். வாகன பதிவெண் நான்கு சக்கர வாகனத்தினுடையது என்ற விளக்கத்தை மின்அஞ்சல் மூலமாக போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளிக்க முயற்சி செய்துள்ளார் நந்தினியின் கணவர் பரணீஸ்வரன். ஆனால் சரியான பதில் கிடைக்காததால் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான காவல்துறையினரின் விசாரணை போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,262.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.