Show all

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக முதலிடம் பெற்றுள்ளது

பீகாரில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த முறையும் பீகாரில் கூட்டணி ஆட்சியே முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த முறையும் பீகாரில் கூட்டணி ஆட்சியே முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

75 தொகுதிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம், கூட்டணிக் கட்சிகளோடு 110 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிலையில், ஆட்சிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12தொகுதிகள் தேவையான நிலையில், அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது. 

இந்த மாதிரியான வெறுமனே 12 தொகுதிகள் மட்டுமே ஆட்சிப் பெரும்பான்மைக்கு தேவை என்கிற நிலை பாஜகவுக்கு அமைந்திருக்குமேயானால் தன் அரசியல் வேத விளையாட்டுகள் மூலம், எளிதாக பாஜக ஆட்சியைப் பிடித்து விடும். 

அந்த மாதிரியான வேத விளையாட்டுக்களுக்கு தேவை எழாத நிலையில், பாஜக 74 தொகுதிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தாலும் கூட, பீகார் சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று பாஜக- ஐக்கிய ஜனதாதள கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணியில் போட்டியிட 70 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தன் மீள்நிறுவு முயற்சியில் ஈடுபடுவதில் பொறுப்பில்லாமல் இருக்கிறது. அதனால், அந்தக் கட்சியோடு கூட்டணியில் இருப்பவர்கள் அந்தக் கட்சிக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டாம் என்பதைக் கற்றுக் கொள்ளும் வகையான அரசியல் முன்னெச்சரிக்கையாகும் இது என்பது சிறப்புச்செய்தி. 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வென்றுள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வென்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான முன்னாள் முதல்வர், ஜிதன்ராம் மஞ்சியின், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா 4ல் வெற்றி பெற்றுள்ளது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 16ல் வெற்றி பெற்றுள்ளன. மகாகட்பந்தன் கூட்டணிக்கு, மொத்தம் 110 தொகுதிகள் கிடைத்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.