பீகார் தேர்தல் முடிவுகளிலிருந்து திமுகவிற்கு நல்லதொரு பாடம் இருக்கிறது. அந்தப் பாடத்தை கடைபிடித்தால் திமுகவிற்கு மிகச்சிறப்பான வெற்றி தர தமிழகம் காத்திருக்கிறது. 26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: எதிர்வர இருக்கிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப் போவது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிற செய்தியாகும். அதே சமயம் திமுகவிற்கு மிகச்சிறப்பான வெற்றி தர தமிழகம் காத்திருப்பதை திமுக தட்டிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அந்தத் தட்டிவிடும் வாய்ப்பு என்பது- காங்கிரசுக்கு பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 19 வெற்றிக்கு 70 தொகுதிகளை இரையாக்கியது போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது ஆகும். காங்கிரசுக்கு மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தருகிற அளவில் திமுக இடம் தந்தால் போதும் என்பதுதான் பீகார் தேர்தல் முடிவு திமுகவிற்குத் தரும் பாடமாகும். ஆனால் பீகாரை அதிமுக முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பாஜகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்குமேயானால், பாஜக நோட்டாவை வென்று விடும். அப்புறம் தமிழகத்;திற்கே ஆபத்துதான். பாஜக தமிழகத்தில் நோட்டாவிற்கு கீழ் இருக்கும் வரைதான் தமிழகத்திற்குப் பாதுகாப்பு. பாஜக நோட்டவை வென்று விடுமானால், கிறுத்துவர்களும், முகமதியர்களும் தமிழர்களோடு அணிச்சலையும் (கேக்) ஊண்சோற்றையும் பகிர்ந்து உறவு கொண்டாடும் நிலைக்கு ஆப்பு விழுந்து தமிழகம் பின்பற்றி வரும் மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துவிடும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிமுக மாதிரி, பீகாரில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தமிழகத்தில், பீகாரைப் போல பாஜகவிற்கு செல்வாக்கு இருப்பதாக நம்பி, அதிக இடங்களை அதிமுக ஒதுக்கிவிடக் கூடாது. அதிமுக பீகாரைப் பாடமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் தமிழகத்தில் பாஜக நோட்டாவிடமே தோற்கிற நிலையில்தான் இன்னமும் இருக்கிறது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். அறிவுஆட்சி செய்யும் தமிழகத்திற்கு நம்பிக்கை ஆட்சியை கொடுத்து வரும் பாஜக தோதுப்படாது. மூடநம்பிக்கைகளிலிருந்து எழுந்த தமிழகத்திற்கு மீண்டும் நம்பிக்கை ஆட்சி தேவையில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



