அதிரடி தொடர்ந்து அழைப்பாணை! பிகில் படத்து வருமானத்தில் முழுமையாக கணக்கு காட்டி மொத்த வருமானத்திற்கு 30விழுக்காடு வருமான வரியும், மேலும் 4விழுக்காடு அரசின் நலத்திட்டத்திற்கான சிறப்பு வரியும் நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரிடம் இருந்து குறைவாக செலுத்தப் பட்டிருக்கலாம் என்று வருமான வரித்துறைக்கு ஐயம் ஏற்பட்டிருக்கிறது. 27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிகில் படத்து வருமானத்தில் முழுமையாக கணக்கு காட்டி மொத்த வருமானத்திற்கு 30விழுக்காடு வருமான வரியும், மேலும் 4விழுக்காடு அரசின் நலத்திட்டத்திற்கான சிறப்பு வரியும் நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரிடம் இருந்து குறைவாக செலுத்தப் பட்டிருக்கலாம் என்று வருமான வரித்துறைக்கு ஐயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஐயத்தை வருமான வரித்துறை போக்கிக் கொள்ளும் வரை அவர்கள் மூவரும் குற்றவாளிகள். அந்தக் குறைச்சல் தொகையை உங்கள் வீட்டில் அனைத்து சந்து, பொந்து இண்டு இடுக்கெல்லாம் தேடி அதை நாங்களே கண்டு பிடித்து விடுகிறோம் என்று, இந்த மூவரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் ஆகியன அள்ளிச் செல்லப்பட்டன. விஜய் வீட்டில் இருந்து அப்படியான எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் செய்தி வெளியாகி விஜய் இரசிகர்கள் கெத்து காட்டியது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு? இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அள்ளிச் செல்லப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் அணியமாக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே நடிகர் விஜய் உள்பட 3 பேரும், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்துக்கு இன்று(திங்கட்கிழமை) அல்லது நாளை(செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை மறுநாள் நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் களை வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



