Show all

8வது கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல்- பாராட்டுவோம்! நீட் தேர்வு இல்லாதவை இந்தக் கல்லூரிகள். உமிக்கு அனுமதியில்லை

தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் தெற்காசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை, ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், இப்பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டினார். இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கான முத்திரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வு என்பதே தமிழகத்தைப் பொறுத்த வரை, பிற மாநிலத்தினர், உமிகொண்டு வந்து ஊதிசாப்பிடுவதற்கான நடைமுறைக்காக முன்னெடுக்கப் படுவதுதான். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மருத்துவக் கல்லூரிகளும் அதிகம், மருத்துவ மனைகளும் அதிகம். 

நல்லவேளையாக தமிழக அரசு முன்னெடுத்திருப்பது கால்நடை மருத்துவ மனை. ஆம் தமிழகத்திற்கு எட்டாவது கால்நடை மருத்துவ மனை கிடைக்கிறது. ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையின் ஒரு அங்கமாக கால்நடை அறிவியல் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 80 மாணவர்கள் படிக்கலாம். முதல்கட்டமாக 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 80 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் தமிழகத்தில் கால்நடை மருத்துவ சேர்க்கைக்கான இடங்கள் 360-ல் இருந்து 440ஆக உயரும்.

கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆராய்ச்சி மையமும், பிரமாண்டமாக சர்வதேச தரத்தில் அமைகிறது. இது தவிர கால்நடை வளர்ப்பு பயிற்சி மையம், பால் பதப்படுத்துதல், ஏற்றுமதி மையம் மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுகிறது.

தரமான நாட்டுக்கோழிகள் வழங்குவதற்காக நாட்டு கோழி இனப்பெருக்க பண்ணையுடன் இணைந்த குஞ்சு பொரிப்பகம், தீவன அலகு ரூ. 48.81 கோடியில் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.

இன்றும், நாளையும், அங்கு கருத்தரங்கம் நடக்கிறது. இதில் சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு கால்நடை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

ஆம்! தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் தெற்காசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை, ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், இப்பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கால்நடை மருத்துவக்கல்லூரி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் ஆகிய பிரிவுகளுடன், ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவாக இந்த வளாகம் திகழும்.

இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கான முத்திரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, கால்நடை கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், நாட்டு பசுக்கள், ஆட்டினங்கள், கால்நடை தீவனங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.