காவிரி கழிமுகம் பாதுகாப்பு வேளாண் மண்டலம்! இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என காவிரி கழிமுக மக்கள் எச்சரிக்கிறார்கள். மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவைகளை தமிழக அரசு உடனே திரும்ப வேண்டும். 27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி கழிமுக மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். இப்பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காவிரி கழிமுக மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, வேளாண்பெருமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள், அரசியல்வாதிகள், என பல தரப்பிலிருந்தும் பாராட்டும், நன்றியும் குவிந்து வருகிறது. அதேசமயம், இந்த அறிவிப்புக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்க, உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என உழவர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள். மேலும் அவசர சட்டம் இயற்றவும் விரைவான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியாக வேண்டும். ஒன்றிய பாஜக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கவும், எதிர்காலத்தில் சட்டத்தில் ஓட்டகளை உருவாக்காமல் தடுக்கவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் உழவர்கள் சங்க நிர்வாகிகளுடம் கலந்தாலோசித்து, அதற்கான வரைவை உருவாக்க வேண்டும். மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவைகளை தமிழக அரசு உடனே திரும்ப வேண்டும் என்பதாக வேளாண் பெருமக்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



