Show all

கர்நாடகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின! ஆபத்தில் விஞ்சி நிற்பது- கொரோனாவை விட, தேர்வு இரத்தே என்பதாக

முகமூடிகள், கழுவுபொருட்கள், தனிமனித இடைவெளியுடன் கர்நாடகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இந்தத் தேர்வை சுமார் 8.48 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலால் இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளின் பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் சில மாநிலங்களில் தேர்வை இரத்து செய்வது கொரோனாவை ஆபத்தானதாகக் கருதி, ஆபத்தில் விஞ்சி நிற்பது தேர்வு இரத்தே என்பதாக தேர்வை நடத்திட முற்படுகின்றனர்.

கல்லூரிகளின் தேர்வுகளை இரத்து செய்யவும் அண்மையில் பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இத்தேர்வை 8,48,203 மாணவர்கள் எழுதுகின்றனர்.

காலையில் தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களுக்கு முகமூடிகள் வழங்கப்பட்டன. கைகளுக்கு கழுவு பொருட்கள் கொடுக்கப்பட்டன. உள்ளே செல்லும் முன் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளின்போது தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

ஏன் கட்டாயம் இந்தப் பொதுத் தேர்வுகள் என்பது குறித்து, கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறும்போது, ஒரு மாணவரின் வாழ்க்கையில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு என்பது மைல்கல். ஏராளமான நபர்களிடம் கலந்து ஆலோசித்தே இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனினும், குழந்தைகளின் பாதுகாப்பே முதன்மை. அதானல் ஒவ்வொரு தேர்வு மையங்களில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

ஒன்பதாம் வகுப்பு வரை தேறிவந்த மாணவனுக்கு பத்தாம் வகுப்பில் அதுவரை பயிற்றுவிக்கப்பட்ட பாடங்களில் அவனது இயல்புக்கு தக்கவாறு தெரிந்து கொண்டிருப்பான். நடத்தாத பகுதிகளில் அவனை சோதிக்க முடியாது. காலாண்டு அரையாண்டுக்காக கொஞ்சம் படித்திருப்பான். அவனுக்கு இந்தக் கடுமையான கொரோனா போரட்ட காலத்தில்- அவனைப் பரிசோதித்துதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அவனுக்கு பத்தாம் தேர்ச்சி தாராளமாகக் கொடுக்கலாம் என்று இயல்பாக சிந்தித்து தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வை இரத்து செய்தது. நம்மைப் பொறுத்த வரை இதுதான் சரி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.