நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளருக்குக் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மனமடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நெல்லை நகரின் மையமான நெல்லையப்பர் கோயிலை ஒட்டி உலகப்புகழ்பெற்ற இருட்டுக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்தக் கடையின் உரிமையாளர் ஹரிசிங்கின் மருமகனுக்கு அண்மையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஹரிசிங்குக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செவ்வாய்க் கிழமை இரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவரும் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை ஹரிசிங்குக்கும் கரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மனமடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நெல்லை நகரக் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர். ஹரிசிங் வசித்து வந்த நகரப்பகுதி அம்மன் சன்னதி தெருவில் தீவிர நலங்குப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை இருட்டுக் கடை, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டு இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது. நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் தற்கொலை அம்மாநகர மக்களுக்கு மட்டுமல்லாது கேள்வியுறும் அனைவருக்கும் கொரோனாவோ, கொரோனா சிகிச்சையோ இவ்வளவு கோழைத்தனத்தை தூண்டுவிக்கிறதா என்ற அதிர்ச்சி தரவல்ல செய்தியாக அமைகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



