Show all

பாஜகவின் சாதனையை முறியடித்தது சிவசேனா! நோட்டாவுடன் மோதும் போட்டியில்

தமிழகத்தில் பாஜகவின் போட்டி எப்போதும் நோட்டாவுடன் தான் இருக்கும். ஆனால் தற்போது மகாராட்டிரத் தேர்தலில் ஓர் இடத்தில் சிவசேனா நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று தமிழக பாஜகவின் சாதனையை முறியடித்திருக்கிறது.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 106 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி கடந்த தேர்தலை விட 28 தொகுதிகள் குறைவாகவும், காங்கிரஸ் கூட்டணி கடந்த தேர்தலை விட கூடுதலாக 21 இடங்களையும் பெற்றுள்ளன.

பாஜக தனித்து 100 தொகுதிகளையும், சிவசேனா 57 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலை விட தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

லதூர் (ஊரகம்) தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திராஜ் தேஷ்முக் சுமார் 1,20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளரை வைப்புத் தொகை இழக்க வைத்துள்ளார்.

வேடிக்கை என்னவென்றால் திராஜ் 135006 வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்க, நோட்டாவுக்கு 27500 வாக்குகள் விழுந்துள்ளது. ஆனால், சிவசேனா வேட்பாளர் 13524 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,316.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.