Show all

தமிழக மக்களின் எச்சரிக்கை! இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வென்றால், இரண்டு கட்சிகளுமே கவனமாக செயல்பட வேண்டும் என்று பொருள்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக மக்கள் அதிமுக மீதான கோபத்தைக் குறைத்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்த வெற்றியை அதிமுக சாதித்திருக்கிறது என்று கொள்ள முடியாது என்றும், திமுக சப்பையாக செயல்படுகிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,782 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக - 1,13,428
திமுக - 68,646
நாம் தமிழர் - 2,913

நாங்குநேரி தொகுதியில் 33,445 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.,வின் நாராயணன் வெற்றி பெற்றார்.
அதிமுக - 95,377
காங் - 61,932
நாம் தமிழர் - 3,494

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,316.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.