Show all

சீறி வருகிறது சிங்கம் இன்றிலிருந்தே விற்பனைக்கு! சிங்கம் என்ற தலைப்பில், மின்சக்தியில் இயங்கும் இழுவண்டிகள் (ரிக்சா)

மக்கள் நடுவே மின்சக்தி வண்டிகள் மீதான ஆர்வம் சமூக ஆர்வலர்களால் தூண்டப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் இந்த வகைக்கு புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முன்னணி மின் இழுவண்டி (ரிக்ஸா) உற்பத்தி நிறுவனமான யு.பி.டெலிலிங்க்ஸ் நிறுவனம், சிங்கம் என்ற புதிய மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மின்சக்தியில் இயங்கும் வண்டிகள், குழந்தைகளின் பொம்மை வண்டிகள் போல இயங்குவதால், அதில் ஒரு திகில் அனுபவம் கிடைக்காத நிலையில், அதன் மீதான ஆர்வப்பாடு எதிர்மறையாக உள்ளது. 

மேலும், மின்சக்தி வண்டிகளுக்கு அடிப்படையான மின்கலங்களின் செல்;லுபடி காலம் ஐந்தாண்டுகளுக்கு குறைவாகவே அமைவதாலும் மின்சக்தியில் இயங்கும் வண்டிகள் மக்களின் ஆர்வமின்மையை எதிர் கொள்கின்றன. 

ஆனால் மின்சக்தியில் இயங்கும் வண்டிகள் சுற்றுசூழல் மாசுப்பாட்டை ஏற்படுத்துவதில்லை என்பது அந்த வண்டிகளுக்கான பெருஞ்சிறப்பு ஆகும். பெட்ரோல், டீசல் வண்டிகளால் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் சீர்கேடு, இந்தியாவில் மின்சக்தி வண்டிகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது. 

மக்கள் நடுவே மின்சக்தி வண்டிகள் மீதான ஆர்வம் சமூக ஆர்வலர்களால் தூண்டப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் இந்த வகைக்கு புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முன்னணி மின் இழுவண்டி (ரிக்ஸா) உற்பத்தி நிறுவனமான யு.பி.டெலிலிங்க்ஸ் நிறுவனம், சிங்கம் என்ற புதிய மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்திற்கு உற்பத்தி ஆலைகள் உள்ளன. சிங்கம் என்ற தலைப்பின் கீழ் இந்த நிறுவனத்;தால் புதிய மாதிரி மின் இழுவண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தானி போல உருவாக்கப்பட்டுள்ள இந்த மின் இழுவண்டிக்கு 1.85 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வண்டிக்கு 37 ஆயிரம் ரூபாய் அரசின் மானியமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மின்இழுவண்டி மூன்று ஆண்டுகள் பழுது நீக்க உத்தரவாதத்துடன் (வாரண்டி) வருகிறது. இந்த மின்இழுவண்டியில் எல்இடி விளக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சக்தி வாய்ந்த 1,500 வாட் சுழற்றியையும் (மோட்டார்) இந்த மின்இழுவண்டி பெற்றுள்ளது. இதன் லித்தியம் அயான் மின்கலத்தை ஒரு முறை முழுமையாக மின்னேற்றம் செய்தால் 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்றிலிருந்தே கேட்பு முன்னுரிமை அடிப்படையில் இதன் விற்பனை தொடங்கியுள்ளது என்பது இந்த வண்டி வெளியீடு குறித்த மகிழ்ச்சியான செய்தியாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.