Show all

சிக்கினவன் செத்தாண்டா! என்னும் பாணியில் ஏர்டெல்லின் புதிய கட்டணத்திட்டம்

ஏர்டெல் ரூ.248க்கு ஒரு புதிய கட்டணத் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளருக்கான சலுகைத் திட்டமல்ல. சிக்கினவன் செத்தாண்டா! என்னும் பாணியில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் திட்டமாகும்.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்கு ரூ.248 முன்கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் அன்றாடம் 1.4ஜிபி தரவு வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அழைப்புகள், மற்றும் 100சேதிகளும் 28 நாட்களுக்கே. 

தற்போது அதிகமான ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் திட்டம் 399 திட்டத்தில் கட்டணம் திருப்பும் சலுகையாக ரூ 50 போக 344 க்கு கிடைக்கும் தரவு, அழைப்பு, சேதிகள் 84 நாட்களுக்குத் தரும் திட்டமே. 

இதில் வாடிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செலவு ரூ.4.15 ஆகிறது. இந்த சிக்கினவன் செத்தாண்டா புதிய திட்டத்தில் ஒரு நாள் செலவு ரூ.8.86 ஆகிறது. 

வாடிக்கையாளர்கள் விளம்பரங்களைப் பார்த்து எந்த சலுகை திட்டத்திலும் அவசர அவசரமாக நுழைந்து இழப்பில் விழுந்து விடாதீர்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.