எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சிஎன்என்நியூஸ் 18 சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டணி ஆட்சியே வேண்டும் என்பதாக மக்கள் 280 தொகுதிகளை அதற்காக ஒதுக்க இருக்கிறார்கள் என அறிய முடிகிறது. 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பரப்பும் கருத்துப்பரப்புதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிஎன்என் செய்தி 18 நடத்திய கருத்துக்கணிப்பில், தனிப்பெரும்பான்மை வழங்கும் தகுதியில் எந்தக் கட்சியும் இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக தவிர்த்த கட்சிகள் 280 இடங்களை பெற்று இந்தியாவில் முதன் முதலாக ஓர் உண்மையான குடிஅரசு ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. தேசியக் கட்சி என்ற போர்வையில் முழங்கி, நடுவண் அரசில் அதிகாரம் செலுத்தி வந்த, குஜராத் மாநிலக் கட்சியான பாஜக கூட்டணிக்கு 263 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 76 தொகுதிகள் குறைவு. காங்கிரஸ் கூட்டணிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகள் 141 தொகுதிகளிலும் என பாஜக தவிர்த்த கட்சிகள் 280தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சிக்கு 56 தொகுகளிலும், மற்ற கட்சிகளுக்கு 20 தொகுதிகளிலும் அதிக வெற்றிகள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவை பொறுத்தவரை, மொத்தமுள்ள 129 தொகுதிகளில் பாஜக கூட்டணி 28, காங்கிரஸ்., கூட்டணி 49 மற்றும் பிற கட்சிகள் 52 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், திமுக கூட்டணிக்கு 21, அதிமுக கூட்டணிக்கு 12 மற்றும் அமமுக., கட்சிக்கு 6 தொகுதிகள் கிடைக்கும். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 19, தெலுங்கு தேசம் கட்சி 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எங்கும் வெற்றி கிடைக்காது. கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்கு 16, காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., 15, காங்கிரஸ் 1 மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெறும். கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பாஜகவுக்கு எந்த தொகுதியும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உண்மையான குடிஅரசுக்காக, மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகியுள்ள நிலையில், மாநிலக்கட்சிகள் சிந்தித்து, பேசி, பழகி வாக்குகளை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தை இந்தக் கருத்துக் கணிப்பு மாநிலக் கட்சிகளுக்கு உணர்த்துகிறது. இந்தியாவின் ஒரேஅன்னியம், ஒரேபகை: பாஜக! இரத்த உறவுகளான மாநிலக்கட்சிகள் ஒற்றுமையாக இயங்க வேண்டிய காலம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,117.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.