இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துங்கள். மாநில அரசுகளுக்கு நடுவண் பாஜக அரசு அறிவுரை. 21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துங்கள். மாநில அரசுகளுக்கு நடுவண் பாஜக அரசு அறிவுரை. சீனாவில் உருவான கொரோனா நுண்யிரி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தெலங்கானா மென்பொறியாளருடன் தொடர்பில் இருந்த 88 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட டெல்லி நபரோடு தொடர்பில் இருந்த ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்கள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் இருந்து கடந்த 29-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்த சுற்றுலாப் பயணி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் வந்த மனைவிக்கும் கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஈரானில் இருந்து திரும்பிய இந்திய ராணுவ மேஜர், மத்திய பிரதேச மாநிலம் மோவில் உள்ள அவரது இல்லத்தில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். தெற்கு டெல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த 21 இத்தாலி பயணிகள் மற்றும் 3 இந்தியர்கள் இந்தோ- திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களது ரத்த மாதிரிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அந்த நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் சீனர்களுக்கான ஏற்பிசைவு ரத்து நடவடிக்கை தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அனைத்து மாநில நலங்குத்துறை செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொளிக் காட்சி மூலம் ஆலேசனை நடத்தினார். அதில், அனைத்து மாநிலங்களின் விமான நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, மாவட்ட, தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் உள்ள குழுக்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ராஜீவ் கவுபா அறிவுறுத்தியுள்ளார். இதேபோல, மாநிலங்களில் நோயாளிகளை தனிப்படுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட சாதாரண ஏற்பிசைவு, மின் ஏற்பிசைவு ஆகியவை தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



