தமிழகத்தில் அனுமதிபெறாமல் செயல்படுவதாக குடுவைக் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஏழு நாட்களாக ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு வந்தது. 21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் அனுமதிபெறாமல் செயல்படுவதாக குடுவைக் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஏழு நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். எண்பது விழுக்காட்டு நிறுவனங்கள் அனுமதிபெறாமல் செயல்படுகிற நிறுவனங்களே என்ற நிலையிலும், மீதி இருபது விழுக்காட்டு நிறுவனங்களும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தால்- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடுவைக் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. மேலும் குடுவைக் குடிநீர் விலை முன்பைவிட 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், நாளொன்றுக்கு 300 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படுவதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் தொடர்பான வழக்கு இன்று உயர் அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவுபடி மூடப்பட்ட ஆலைகளின் உரிமையாளர்கள் புதுப்பிக்கத் தகுந்த விண்ணப்பத்தை வழங்கினால் அது குறித்து 15 நாட்களுக்குள் பரிசீலிக்குமாறும், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் அளவைக் கண்காணிக்க குழு அமைக்குமாறும் அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தின் நியாயம் உணர்ந்து- உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு- நமக்கான மொழி, நமக்கான அரசு, நமக்கான அறங்கூற்றுமன்றம் என்கிற நெருக்கத்தில் இது எளிமையாக சாத்தியமானது. அனுமதியின்மை என்பது அனுமதிக்கான செயல்பாடாக முன்னெடுக்கப்பட்டது. வாழ்த்துக்கள்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



