Show all

தேர்வெழுத அனுமதி மறுப்பு! கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி

எல்லா மாணவர்களும் மதிய உணவுக்கு வழியில்லாமல் பட்டினியோடுதான் நீட்டை எதிர் கொண்டார்கள்.

28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாடு முழுக்க கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வை நடத்தி முடித்துள்ளது ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு. இந்த நீட் தேர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள் அறங்கூற்றுமன்றம் வரை சென்று எதிர்ப்பு தெரிவித்தும்- ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசின்  இந்த, தேவையேஇல்லாத, அடாவடி  நீட் தேர்வுக்குத் தடை பெறமுடியவில்லை.

இன்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியது. மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடந்தது. சென்னையில் மழை தூறிக் கெண்டிருந்தது. மாணவர்கள் தேர்வு மையத்தின் தொலைவு அடிப்படையில காலை பத்து மணியிலிருந்தே தொடங்க ஆயத்தமானார்கள். 

நீட் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எல்லோருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா காலம் என்பதால், தேர்வு அறைக்கு மாணவர்கள் முன்பே வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. எல்லா மாணவர்களும் மதிய உணவுக்கு வழியில்லாமல் பட்டினியோடுதான் நீட்டை எதிர் கொண்டார்கள்.

மாணவர்கள் முகமூடி அணிவது கட்டாயம். மாணவர்கள் எல்லோரும் தண்ணீர் குடுவை மற்றும் சானிடைசர் கொண்டு வருவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சோதனை செய்யப்பட நிலையில் இன்று தேர்வுக்கு முன் கொரோனா சோதனை முடிவு வெளியானது.

கரூர் வி.எஸ்.பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத இவர்- கொரோனா உறுதியானதால் அவரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து திருப்பி அனுப்பினர். இவருக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு திரும்ப வழங்கப்படுமா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.