Show all

கொரோனாவோடு விளையாடாதீர்! மணமகன் உயிரிழப்பு- திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு. காரணம் மணமகனுக்கே கொரோனா. உயிரிழந்துள்ளார் மணமகன்.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிகழ்வு பீகார் மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த பாலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக்கு நாளது 01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122 (15.06.2020) அன்று திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட நிலையில், திருமணம் நடைபெற்ற இரண்டு நாட்களில் மணமகன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், இறப்புக்குக் காரணம் கொரோனா பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததையடுத்து, மணமக்கள் வீட்டார் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட இந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.