பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. 17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த மாத இறுதியில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்து குறித்து நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகம் பல கேள்விகளை எழுப்பியது. அதே நேரம் அதை விளம்பரம் செய்யவும் தடை விதித்தது. ஆனால் இதெல்லாம் நாடகம். மோடியின் நண்பர் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்குத் தடையா? என்று இணையத்தில் பகடி ஓடியது. அதுபோலவே- கொரோனில் மருந்து கொரோனாவைக் குணமாக்கும் என்று சொல்லவில்லை என்றும், கொரோனா நோயாளிகள் அதை எடுத்துக் கொண்ட போது, அவர்களுக்கு குணம் கிடைத்தது என்றும் பதஞ்சலி நிறுவனம் நேற்று விளக்கம் அளித்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் ‘கொரோனில்’ மருந்தினை நோய் எதிர்ப்பு சக்தி ஊக்க மருந்தாக மட்டும் விற்றுக் கொள்ளலாம் என்று நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறி விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



