தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஆன- நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை கொரோனா பரவலுக்கு எதிராக- “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன. 17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஆன- நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை கொரோனா பரவலுக்கு எதிராக- “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைக் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்றே அழைக்கின்றனர். பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 5-வது தடவையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. என்றாலும் இந்த ஊரடங்குகளால் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முந்தாநாள் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அதாவது “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டது. கொசுவை விரட்ட கோடரி எடுத்த கதையாக கடந்த 98 நாட்களில் கொரோனா பரவல் தடுப்புக்கு நாம் முன்னெடுத்த ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. பெரும்பான்மையான 80 விழுக்காட்டு மக்களுக்கு தொழிலும் தொழில் மூலமான வருமானம் சம்பளம் இல்லவேயில்லை. அது மட்டுமில்லாமல் கட்டாயத் தேவைப் பொருட்களின் விலையேற்றம் வேறு. இன்னும் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு அடிக்கடி டாஸ்மாக் திறப்பின் மூலமான பாதிப்பு வேறு. நடுவண் அரசு அதிகாரப்பாடாக ஊரடங்கை அறிவித்து விட்டு சும்மாதான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் மாநில அரசு சும்மா இல்லை. கொரோனா இருப்பவர்களைக் கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை சிறப்பாக முன்னெடுத்து 60விழுக்காட்டு குணமளிப்பைக் கொடுத்திருக்கிறது. அதற்கு மருத்துவர்களும், மருத்துவத் துறைப் பணியாளர்களும், நலங்குத் துறையினரும் பெரும்பங்களிப்பு செய்தனர். கொசுவை விரட்ட கோடரி எடுத்தது போல, காவல்துறை முற்றிலும் அந்த வீணாய்ப் போன ஊரடங்குக்கே பயன்படுத்தப் பட்ட நிலையில், இதுவரை நாம் பெரிதும் போற்றி வந்த அறங்கூற்றுத் துறையை காவல்துறை அசிங்கப் படுத்தியிருக்கிறது. அதுவும் இந்திய வரலாற்றிலேயே தீர்ப்புகளுக்கு மதுரை அறங்கூற்றுமன்றம்! என்கிற பெருமைக்குரிய மதுரைக்கிளையின் அறங்கூற்றுவர் பாரதிதாசன் அசிங்கப்படுத்தப் பட்டிருக்கிறார். காவல்துறையினர் வெயிலில் காய்ந்தார்கள்தாம். அனால் அவர்கள் பணி ஊரடங்கிற்காய் வீணடிக்கப்பட்டது. தனிமனிதர்களாக முகமூடியோடு பைக்குகளில் பயணித்தவர்களைக் தோப்புகரணம் போட வைத்தது நியாயமேயில்லை. மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது நலங்கு வல்லுநர்கள் குழுவுடன் முதல்-அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால்தான், கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும், கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள். மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், நேற்று பொது நலங்க வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா தொற்றை தடுப்பதற்கான பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும்- நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை கொரோனா பரவலுக்கு எதிராக- “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து இன்றிலிருந்து பதினைந்து நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. (சிறப்பு) அந்தந்த மாவட்டத்திற்குள் மின்அனுமதி இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், மின்அனுமதி முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் மின்அனுமதி வழங்கப்படும். (சிறப்பு) நகர்ப்புற வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. (சிறப்பு) கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது. (சிறப்பு) தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள், விடுதிகள்;, பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை நீடிக்கிறது. ஆனாலும் மருத்துவத் துறை, காவல்துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தடை நீடிக்கிறது. ஆனாலும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம். (சிறப்பு) மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர அனைத்து நாடுகள் விமான போக்குவரத்திற்கான தடை, மெட்ரோ ரெயில், மின்சார ரெயிலுக்கான தடை நீடிக்கும். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளின்படி, திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. (அவர்களின் பட்டியலை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் பேண வேண்டும்) தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. என்றாலும், 20 விழுக்காட்டுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து காட்சிக் கடைகள் மற்றும் பெரிய கடைகள் நகை, துகில் போன்றவை 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இயக்கப்படக் கூடாது. (கடைக்கு வந்து சென்றவர்களின் வருகைப்பதிவைக் கட்டாயமாக்க வேண்டும்.) தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீத அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. கட்டாயத் தேவையற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. (இது மிக மிக சிக்கலான அனுமதிப்பாகும். இங்கே வருகைப்பதிவைக் உறுதியாகக் கட்டாயப் படுத்தல் வேண்டும்.) ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மிதிவண்டிக் கூண்டும் அனுமதிக்கப்படுகிறது. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் அனுமதிக்கப்படுகிறது. பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். (சிறப்பு)
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு என்று நாளது 12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122 (25.03.2020) புதன் கிழமை முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
(கடைக்கு வருகிறவர்கள் கொரோனா பாதிப்பு உள்ளவர்களா என்பதை கண்டறிய வழியில்;லை. ஏன்? உரிய நபருக்கே தனக்கு கொரோனா பதிப்பு இருக்கிறதா என்று தெரியாது. எனவே சிரமம் பாராமல் கடைக்கு வந்து போகிறவர்களின் வருகையை செல்பேசியில் ஒரு சேதி அனுப்பச் சொல்லி பதிவு செய்யலாம். கடைக்காரருக்கு கொரோனா பாதிப்பு வரும்போது அவர் யாரிடம் இருந்து கொரோனாவைப் பெற்றிருப்பார் என்று கண்டு பிடிக்கப் பயன்படும்.)
(அந்தந்த மாவட்டத்திற்குள் மின்அனுமதி இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்பதில் யாருக்காது கொரோனா இருந்தால், யாரிடம் இருந்து கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்கப்படாமல், கொரோனா வந்தவர்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே தனிப்பாதையில் கொரோனாவை பரப்பிக் கொண்டிருப்பார். எனவே எந்த வகையிலாவது பயணித்தவர் பட்டியல் ஓட்டுநர் வசம் இருக்க வேண்டும். இதற்கும் பயணிகள் அனைவரும் ஓட்டுநர் அல்லது நடத்துனரின் செல்பேசிக்கு சேதி அனுப்பினால் மட்டுமே அனுமதிக்கப்படலாம்.)
(இங்;;;;கேயும் வந்து சென்றவர்களின் தெளிவான பட்டியல் முறைப்படுத்தப்பட வேண்டும்.)
(இங்கேயும் வருகைப் பதிவு கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.)
(மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை அனுமதிக்க வருகை பதிவு கட்டாயமாக்க வேண்டும்)
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை நீடிக்கும். (சிறப்பு)
(இங்கே உறுதியாக வருகைப் பதிவு இருக்கும். இதற்கெல்லாம் தொடங்கத்திலிருந்தே தளர்வு அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும் ஊரடங்கை திணித்தது மாபெரும் மடமையாகும்.)
(இது மிக மிக சிக்கலான அனுமதிப்பாகும். இங்கே வருகைப்பதிவைக் உறுதியாகக் கட்டாயப் படுத்தல் வேண்டும்.)
(இது மிக மிக சிக்கலான அனுமதிப்பாகும். இங்கே வருகைப்பதிவைக் உறுதியாகக் கட்டாயப் படுத்தல் வேண்டும்.)
(இது மிக மிக சிக்கலான அனுமதிப்பாகும். இங்கே வருகைப்பதிவைக் உறுதியாகக் கட்டாயப் படுத்தல் வேண்டும்.)
(இது மிக மிக சிக்கலான அனுமதிப்பாகும். இங்கே வருகைப்பதிவைக் உறுதியாகக் கட்டாயப் படுத்தல் வேண்டும்.)
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



