Show all

நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் அடாவடி! ஒன்றியத்தின் அலுவல்மொழிகள் சட்டத்தில் முன்னெடுத்த மாற்றங்களைப் புதுப்பிக்கவில்லை

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை அறிவித்து சட்டமாக்கிய பின்னரும் தொடக்க காலத்தில் அந்த இடத்திற்கு ஹிந்தியை முதன்மைப் படுத்தியிருந்த பழைய நிலையை புதுப்பிக்காமல் (அப்டேட்) நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் ஹிந்தியை முதன்மைப் படுத்தியிருந்த நிலையையே ஒன்றியத்தின் மொழிக் கொள்கையாக நடுவண் அரசு நிருவாகத்தில் தொடர்ந்து வருகின்றனர்.

25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை அறிவித்து சட்டமாக்கிய பின்னரும் தொடக்க காலத்தில் அந்த இடத்திற்கு ஹிந்தியை முதன்மைப் படுத்தியிருந்த பழைய நிலையை புதுப்பிக்காமல் (அப்டேட்) நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் ஹிந்தியை முதன்மைப் படுத்தியிருந்த நிலையையே ஒன்றியத்தின் மொழிக் கொள்கையாக நடுவண் அரசு நிருவாகத்தில் தலைப்பில் பதிவிட்டு வருகின்ற அடாவடியில் கடந்த நாற்பது ஆண்டுகளாகவே தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.   

எடுத்துக்காட்டாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையப் பக்கத்திற்குப் போனால் அங்கு ஒன்றியத்தின் அதிகாரப்பாட்டு மொழிக்கொள்கை என்ற தலைப்பில் உள்ள தகவல் “இந்திய அரசியலமைப்புச் சட்டம் எட்டில் பட்டியல் இடப்பட்ட 22மொழிகள் இந்தியாவின் அலுவல்பாட்டு மொழிகள்” என்று இருக்க வேண்டும். ஆனால் “தேவநாகரி எழுத்தில் ஹிந்தி என்பது ஒன்றியத்தின் உத்தியோகப்பாட்டு மொழியாகும்” என்று இன்னும் நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகளால் புதிப்பிக்கப்படாமல் பழைய நிலையே தொடரப்பட்டு வருகிறது. 

விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயஅவையில் இந்தியாவின் தேசிய மொழி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன. ஹிந்தியா அல்லது ஹிந்துஸ்தானியா என்ற விவாதம் நடைபெற்ற நிலையில் இந்த அவையில் இடம் பெற்றிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஜி.துர்காபாய், ராமலிங்க செட்டியார், என்.ஜி.ரங்கா, என். கோபாலசாமி ஐயங்கார், எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோர் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வேண்டும் என்றனர்.

மூன்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு 1949ஆம் ஆண்டு முன்சி - கோபால்சாமி ஐயங்கார் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்பின் 17ஆவது பிரிவின் அடிப்படையில் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த ஹிந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்று தெரிவிக்கப்பட்டது. இந்திய ஒன்றியத்திற்கு ஒரு தேசிய மொழி என்ற வாதம் கைவிடப்பட்;டது. இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியாக எந்த மொழியும் சட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை.

1. இந்திய அரசியலமைப்பு, 1950இல், தேவநாகரி எழுத்துருவில் அமைந்த ஹிந்தி ஒன்றியத்தின் அலுவல் மொழியாக அறிவித்திருந்தது. 
2. நாடாளுமன்றம் மாறாக தீர்மானிக்காதவிடத்து, அரசியலமைப்பு செயலாக்கத்திற்கு வந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு,சனவரி 26, 1965, அரசுப்பணிகளுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற ஹிந்தித் திணிப்புக்கான அங்கீகாரமும் இடம் பெற்றது. 
3. இத்தகைய ஹிந்தித் திணிப்பற்கான சட்ட அங்கீகாரம் ஹிந்தி பேசாத பகுதிகளில், முதன்மையாக ஹிந்தியுடன் எத்தகைய ஒற்றுமையும் இல்லாத மொழிகள் பேசும் தென் மாநிலங்களில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

ஹிந்தித்; திணிப்புக்கு சட்டத்தில் அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில் 1964ஆம் ஆண்டு ஆங்கிலப் பயன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி. கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தன. அரசு- போராடிய மக்கள் மீது வன்முறையைக் கையாண்டதால் பலர் உயிர்ப்பலியாகினர். 

இதன் விளைவாக, கொண்டுவரவிருந்த சட்ட முன்வரைவு கைவிடப்பட்டதுடன், சட்டமும் 1967ஆம் ஆண்டு திருத்தப்பட்டு ஹிந்தியை அலுவல்மொழியாக ஏற்காத அனைத்து மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தாதிருக்க தீர்மானம் நிறைவேற்றாதவரையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான தீர்மானம் நிறைவேறாத வரையிலும் ஆங்கிலப் பயன்பாடு முடிவுக்கு வராது என்று நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய திமுகவின் தொடர் முயற்சியால் அட்டவணை எட்டின்படி தமிழ் உள்ளிட்ட 22மொழிகள் இந்தியாவின் அலுவல்பாட்டு மொழிகள் என்;கிற சட்டம் பெறப்பட்டது. இந்தச் சட்டம் பெறப்பட்டு நாற்பது ஆண்டுகளாகியும் மற்ற மாநிலங்கள் மீது ஹிந்தித் திணிப்பு முயற்சி விலக்கிக் கொள்ளப்படாமல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

நடுவண் அரசில் உள்ள ஹிந்தி அதிகாரிகள் அடாவடியாக ஒன்றியத்தின் அலுவல்மொழிகள் சட்டத்தில் முன்னெடுத்த மாற்றங்களைப் நிருவாகத்தில் புதுப்பிக்காமல் ஹிந்தி திணிப்பு நிலை அங்கீகாரத்தையே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.