ஜேபி நட்டாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் அன்றாடம் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் தொற்று உறுதியாகிவருகிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்களும் இலக்காகி வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றியத் தலைவரும் இணைந்துள்ளார். பாஜக ஒன்றியத் தலைவர் ஜேபி நட்டாவுக்கு இன்று கொரோனா நச்சுநுண்ணுயிர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நட்டா தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



