ஆந்திர மாநிலத்தில், வாக்குப் பதிவு எந்திரத்தில் தப்பும் தவறுமாக வேட்பாளர் பெயர் எழுதப் பட்டிருந்தது. இதனால் கோபம் அடைந்த வேட்பாளர் வாக்கு பதிவு எந்திரத்தைத் தூக்கிப்போட்டு உடைத்து பரபரப்பு கிளப்பினார்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் வாக்குபதிவு எந்திரத்தை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா. இவர் அனந்தப்பூர் தொகுதியில் ஜனசேனா சார்பாக போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று காலை அவர் அனந்தப்பூர் தொகுதியில் உள்ள கோட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். ஆனால் வாக்களிக்க வந்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. வாக்குப்பதிவு எந்திரத்தில் அவரது பெயர் தவறாக எழுதப்பட்டு இருக்கிறது. மதுசூதன் குப்தா என்பது சில வார்த்தை பிழைகளுடன் இருந்துள்ளது. அதேபோல் பெயரும் மற்றவர்களை விட மிகவும் சிறியதாக எழுதப்பட்டு இருக்கிறது. இதை பார்த்தும் மதுசூதன் குப்தா கடும் கோபம் அடைந்தார்.
இதையடுத்து மதுசூதன் வாக்குபதிவு எந்திரத்தை தூக்கி போட்டு அங்கேயே உடைத்தார். வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது பெயர் சரியாக இல்லை என்று கூறி அதிகாரிகளுடன் சண்டை போட்டார். அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.