ஒரு நாட்டின் குடிஅரசு ஆட்சியை உறுதி படுத்தும் வகைக்கான தேர்தலில், சில நூறு
மனிதர்களின் தொழில் நுட்ப அறிவை தூக்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்க முடியும்? ஒட்டு மொத்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிற தேர்தலில், பல்லாயிரம் பேர்களின் உழைப்பபைச் சார்ந்திருக்கிற வாக்குச்சீட்டு முறைதானே சிறப்பானதாக இருக்க முடியும்? என்று மக்களை புலம்ப விட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 நாடளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
கடப்பாவில் 126வது பூத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கினர். கடும் வன்முறை ஏற்படும் அச்சத்தில் காவல்துறையினர் கும்பலைக் கலைக்க பலவந்தம் பிரயோகம் செய்தனர். கடப்பாவில் இந்த பூத்திற்கு இப்போதைக்கு பூட்டுப் போடப்பட்டு, வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரகாசம் மாவட்டத்தில் 3260 பூத்களில் வாக்குப்பதிவு தொடங்கியது, ஆனால் நூற்றுக்கணக்கான வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. எந்திரங்களை மாற்றி வைத்தவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
அதே போல் குப்பம் பகுதியிலும் பூத்களில் வாக்குப் பதவு எந்திரங்கள் பல கோளாறு அடைந்துள்ளன. குப்பம் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும்.
கடப்பா நகரில் 163வது வாக்குச்சாவடியில் 'விசிறி' சின்னத்திற்கு எதிராக உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டது. அதே போல் இன்னொரு பூத்தில் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க முடியவில்லை. இதனையடுத்து வாக்குப் பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டன.
இதே போல் அனந்தபூர், மங்களகிரி உட்பட பல பூத்களில் வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சிறு தகராறுகள் ஏற்பட்டன, பிறகு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன, சில எந்திரங்களில் கட்சியின் சின்னங்கள் சரியாகவே தெரியவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
தேவைதானா எந்திரங்கள் மூலமான வாக்குப்பதிவு! ஒருமாத காலம் அவகாசம் எடுத்துக் கொண்டு ஏழுகட்டங்களாக மிகுந்த ஆசுவாசத்துடன் நடத்தப்படும் தேர்தலை வாக்குசீட்டின் மூலமாக நடத்துவதில் என்ன சிரமம்.
ஒரு நாட்டின் குடிஅரசு ஆட்சியை உறுதி படுத்தும் வகைக்கான தேர்தலில், சில நூறு
மனிதர்களின் தொழில் நுட்ப அறிவை தூக்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்க முடியும்.
ஒட்டு மொத்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிற தேர்தலில், பல்லாயிரம் பேர்களின் உழைப்பபைச் சார்ந்திருக்கிற வாக்குச்சீட்டு முறைதானே சிறப்பானதாக இருக்க முடியும்?
தேர்தல் முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்று புலம்பி என்ன ஆகப்போகிறது. சுhம,பேத,தான,தண்ட முயற்சிகளை செய்து ஆட்சிக்கு வந்துவிட்ட கட்சியிடம் நாட்டையும் மக்களையும் ஒப்படைப்பதில் என்ன குடிஅரசு தன்மை இருக்க முடியும்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.