Show all

நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் தொடங்கிவிட்டது! வாக்களிக்கும் கடமையில் பரபரப்பாக மக்கள்

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது.
அந்த வகையில், ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
கடந்த முறை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் இந்த முறை தனியாக தேர்தலை சந்திக்கிறது.
முதல்–மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு (குப்பம்), அவரது மகன் நரலோகேஷ் (மங்களகிரி), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி (புலிவந்துலா), ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண் (பீமாவரம், குஜூவாகா) ஆகியோரின் அரசியல் எதிர்காலம் இன்று நிர்ணயிக்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் ஆகிய மூவரில் யார் ஆந்திராவை ஆளப்போகிறார்கள் என்பதை ஆந்திர மக்கள் இன்று ஓட்டு போட்டு முடிவு செய்கிறார்கள்.
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கிற தொகுதிகளில் மின்னணு ஓட்டு எந்திரங்கள், ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு போய்ச்சேர்ந்து விட்டன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.