சட்டாம் பிள்ளையாக எங்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தால் எல்லாம் கொரோனாவை ஒழிக்க முடியாது. நலங்குத்துறையை வலுப்படுத்துங்கள். தற்போதைய உடனடித் தேவை தடுப்பூசி வழங்கல்தான். ஆதில் வேகம் காட்டுங்கள் என்று மோடிக்கு மடல் எழுதியுள்ளார் மம்தா 23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் அமைச்சராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு ஒரு மடல் எழுதினார். அதில் அனைவருக்கும் வெளிப்படையாகவும், காலவரையறை நிர்ணயம் செய்தும், தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கு வங்காளத்தில் உயிர்வளி பற்றாக்குறையால் பலியானோருக்கு மம்தா கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், ‘‘தற்போதைய நலங்குத்துறை அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். மேலும், “தற்போது கைவசமுள்ள தடுப்பூசிகள் போதாது. 18 அகவையினருக்கு தடுப்பூசி வழங்குமாறு ஒன்றிய அரசு சட்டாம்பிள்ளையாக உத்தரவிட்டிருப்பது மட்டுமே போதுமானதன்று; செயலாக்கம் வேண்டும். எனவே இப்போது கவனிக்கப்படவேண்டிய தலையாயத் தேவை, தடுப்பூசி வழங்கல்தான்” எனவும் கூறி உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.