Show all

பச்சைப்பிள்ளையும் கைக்கொட்டி சிரிக்கும்! ஒன்றிய பாஜக அரசின் வேடிக்கையான நிருவாகம்

அதென்ன அது? குடும்ப அட்டைக்கு ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை! வரி வாங்குவதற்கு ஒரேநாடு ஒரே வரி! கடன் வாங்குவற்கு மட்டும் மாநிலங்களுக்குத் தனி அதிகாரம்? 

27,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆறு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஒரேநாடு ஒரேவரி என்ற முன்னெடுப்பில் சரக்கு சேவை வரி என்ற தலைப்பில் இந்திய மாநிலங்களின் வரி வாங்கும் உரிமையை பறித்துக் கொண்டது ஒன்றிய பாஜக அரசு. மாற்றாக மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. 

ஆனால் நேற்று டெல்லியில் நடந்த சரக்குசேவைவரி குழுவின் கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு சரக்குசேவைவரி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக ஒன்றிய அரசு கடன் வாங்க முடியாது, மாநில அரசுகள் தேவைப்பட்டால் வெளியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. பச்சைப்பிள்ளையும் கைக்கொட்டி சிரிக்கும்! ஒன்றிய பாஜக அரசின் இந்த வேடிக்கையான நிருவாகத்தைப் பார்த்து.

அதென்ன அது? குடும்ப அட்டைக்கு ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை, வரி வாங்குவதற்கு ஒரேநாடு ஒரே வரி. ஒரேநாடு ஒரேதேர்வு நீட் இப்படி ஆதாய வகைகளுக்கும் மட்டுந்தாம் ஒரே நாடா? கடன் வாங்குவற்கு மட்டும் மாநிலங்களுக்கு தனி அதிகாரமா? 

மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய சரக்குசேவைவரி இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இது தொடர்பாக சரக்குசேவைவரி குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நேற்று காணொளி கலந்துரையாடல் மூலம் மீண்டும் சரக்குசேவைவரி குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திலும் மாநில அரசுகள், சரக்குசேவைவரி இழப்பீட்டு தொகையை வலியுறுத்தின. ஆனால் ஒன்றிய பாஜக அரசோ, தம்மிடம் நிதி இல்லை- கடனும் வாங்க முடியாது; மாநில அரசுகள் கடன்வாங்க ஏற்பாடு செய்கிறோம் என கூறியது. 

முன்னதாக இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்துக்கான சரக்குசேவை வரி இழப்பீட்டுத் தொகை ரூ 10,774.98 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.