Show all

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 15இடங்கள்தாம் ஒதுக்குமாம் திமுக கூட்டணி!

காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பனரும் மற்றும், 15 சட்டமன்றத் தொகுதிகள் தரலாம் என்று திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். நல்லது ஸ்டாலின் அவர்களே! அதிமுகவும் இந்த முறை பாஜகவை மதிக்காமல் விட்டால் இன்னும் சிறப்பு! ஒன்றிய ஆட்சிக்கு முயலும் கட்சிகள் குறித்த அச்சம் தமிழக கட்சிகளுக்கு அகன்றால் சரிதான்.

27,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இப்போது ஆட்சியைப் பிடிக்காவிட்டால் எப்போதும் ஆட்சி நமக்கு கிடையாது என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறது திமுக. அந்த வகையில் இந்த முறை தேர்தலில் மிகவும் திரமான முடிவுகளை எடுத்து வருகிறது திமுக. 

அதற்காக தனித்துப் போட்டியிடுவது என்று முயன்றால், நேற்று மூன்றாவது இடத்தில் இருந்த தேமுதிகவைப் பற்றிய கவலை தற்போது இல்லை. ஆனால் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிற பாமக திமுகவின் தோல்விக்கு கடுமையாக முயலும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை பாமகவை விட்டுவிடக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்குள் இழுக்க முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. 

விசிக, மதிமுக நிலைமை தெரியவில்லை. அவர்களுக்கு சின்னம் ஒரு சிக்கலாக உள்ளது. மேலும் விசிக பாமகவிற்கு எதிரணியிலேயே நிற்கும். இவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்காவிட்டால், அல்லது உதயசூரியன் சின்னம் என்று மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டால், வெளியில் இருந்து ஆதரவு தரும் நடவடிக்கையில் இறங்குவார்களா என தெரியவில்லை. ஏனென்றால், இப்போதைக்கு இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திமுகவில்தான் உள்ளனர். அதனால் வேறு கட்சிக்கும் போக முடியாத நிலை உள்ளது. 
இதில் காங்கிரஸ் கட்சிக்கு சின்னம் குறித்த சிக்கல் எழ வாய்ப்பில்லை. சொந்த கட்சி சின்னத்தில்தான் போட்டியிட்டாக வேண்டும். 

ஆனால், தொகுதி ஒதுக்குவதில் திமுக கெடுபிடி காட்டும் என்று திட்டமாகத் தெரிகிறது. கடந்த முறை ஏமாந்து போய் 41 இடங்கள் எடுத்த எடுப்பிலேயே தரப்பட்டது. ஆனால், இந்த முறை அந்த அளவுக்கு இருக்காது என்கிறார்கள். 

ஒன்றிய ஆட்சிக்கு முயலும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தில் செல்வாக்கு இல்லவேயில்லை இல்லை என்பது- தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும், ஏன் இலங்கையும், உலகமும்  அறிந்த கதைதான். ஆனால் ஒரு வேளை அவர்களை ஒன்றிய ஆட்சியில் இந்த வீணாய்ப் போன வட இந்திய மக்கள் கொண்டுவந்து விட்டால், ஒன்றிய ஆட்சிக்குக் கட்டுப்பட்டிருக்கும் அனைத்து துறை அதிகாரிகளின் அலைகழிப்புக்கு ஆளாக வேண்டுமே என்ற அச்சத்தில் தாம் அதிமுக பாஜகவிற்கும், திமுக காங்கிரசும் பணிந்து கிடக்கிறது. 

பிரசாந்த கிசோர் அணி காங்கிரசுக்கு வடஇந்தியாவிலும் செல்வாக்கு இல்லை என்று ஏற்கனவே சொல்லியும் வருகிறது.. அதனால் காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பனரும் மற்றும், 15 சட்டமன்றத் தொகுதிகள் தரலாம் என்று திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். நல்லது ஸ்டாலின் அவர்களே! அதிமுகவும் இந்த முறை பாஜகவை மதிக்காமல் விட்டால் இன்னும் சிறப்பு! ஒன்றிய ஆட்சிக்கு முயலும் கட்சிகள் குறித்த அச்சம் தமிழக கட்சிகளுக்கு அகன்றால் சரிதான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.