Show all

புலம்பெயர்ந்து திரும்புவோர் பெரும் காரணம் ஆவர்! தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு

புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். இதுவே தமிழக கொரோன உயர்வுக்கு பெருங்காரணம். இதற்கு மட்டும் ஒரோநாடு ஒரே வாய்ப்பாடு இல்லையா?

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28694 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 19826 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்;டவர்கள்- தமிழக எண்ணிக்கையில் 68.45 விழுக்காட்டினர் ஆவர். 15,762 பேர்களுக்கு கொரோனா தொற்று குணமாக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கையில் குணமளிப்பு 54.41 விழுக்காடாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதும், தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 

புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய அறைகூவலாக உள்ளது. பொதுமக்கள் தங்களை கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், தொடர்வண்டி, சாலை வழியாக வந்தவர்கள் இன்றைய நாள் வரை மொத்த எண்ணிக்கை 1,33,562 பேர்கள். 

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள் அனைவரையும்- ‘ஒரேநாடு ஒரே கொரோனா’ என்ற தலைப்பில்- அந்த முழக்கத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களான பாஜக நடுவண் ஆட்சி- அவர்களுக்கெல்லாம் சிறப்பு பாதுகாப்பு அளித்து- ஆங்காங்கே சிகிச்சையும், முழுமையான நிவாரணமும் மேற்கொள்ள முயலாதது ஒரேநாடு ஒரே வாய்பாடு கட்சிக்கு பெரும் அவமானம் ஆகும். நோயிக்கு மட்டும் அவரவர் சொந்த மாநிலங்கள் என்றால்- கல்வி, அதிகாரம், குடும்ப அட்டை, வரிகள், போன்றவற்றல் எல்லாம் ஒரேநாடு ஒரே வாய்ப்பாடு எதற்கு?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.