முதியவர்களுக்கு, பிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார், தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிசிஜி தடுப்பூசி மூலம் முதியவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிசிஜி தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கிற நாடுகளில் கொரோனா பாதிப்பு விழுக்காடு குறைவாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழக மருத்துவர்களும், முற்றிய சளிநோயான காச நோய்த் தடுப்புக்கு நல்ல பலன் தந்து வருகிற பிசிஜி தடுப்பூசியை, கொரோனாவற்கு பயன்படுத்திப் பார்த்தால் என்ன என்று முயன்று அதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்திய நலங்குத்துறையிலும் தங்கள் சோதனை முயற்சியின் வெற்றியைத் தெரிவித்து அனுமதி பெற்றிருக்கிறார்கள். அதானால் முதியவர்களுக்;;கு கொரோனா சிகிச்சையில் பிசிஜி தடுப்பூசியைப் பயன்படுத்த இருக்கிறார்கள் என்கிற நல்லதொரு முன்னேற்றச் செய்தியை தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



