டெல்லி தேர்தலில் இமய வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியில், அணி அணியாக புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் இணைந்து வருகிறார்கள். 02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி தேர்தலில் இமய வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியில், அணி அணியாக புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் இணைந்து வருகிறார்கள். டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. வரும் நாளை மறுநாள் டெல்லி முதல்வராக மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். ஆம் ஆத்மியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியின் இமய வெற்றி இந்திய அளவில் அக்கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மிக நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் வெளிவந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஆம் ஆத்மியில் 11 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி தேர்தல் முடிவு வந்த ஒரு நாளில் நாடு முழுவதிலுமிருந்து 11 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



