Show all

ஆடைக்கட்டுப்பாடாம்! மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவிகள்.

தெலங்கானா மாநிலத்தில், ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக, மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் மாணவிகள். போராட்டத்தையடுத்து ஆடைக்கட்டுப்பாட்டு விதியை கல்லூரி நிர்வாகம் தளர்த்தியதாக அறிவித்துள்ளது. பெற்றோர்களை கலந்து பேசி முடிவெடுத்திருக்கலாம்; விதிப்பு, தளர்த்தல் இரண்டுக்கும். 

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவிகள்.

முழங்கால் தெரியும் வகையிலான ஆடைகள் அணிந்து கொண்டு கல்லூரிக்குள் வரக்கூடாது என ஆடைக்கட்டுப்பாடு விதித்தித்தாம் அந்தக் கல்லூரி. 

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத் நகரின் பெகும்பெட் பகுதியில் உள்ளது செயிண்ட் பிரான்சிஸ் மகளிர் கல்லூரி. மிகவும் பிரபலமும், பழமையும் பெற்ற இக்கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவிகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பாணையின்படி, முழங்கால் தெரியும் வகையில் குர்தி, லெக்கிண்ஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து கொண்டு வந்தால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

மேலும் இதற்காகவே கல்லூரி வாயிலில் தனியார் பாதுகாப்பு அமைப்பிலிருந்து பெண்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் பணியமர்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னதாகவே கல்லூரிக்குள் இது போன்ற ஆடைகளை அணிந்து வந்த மாணவிகளை எச்சரித்து கல்லூரிக்குள் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே நேற்று: இன்று முதல் அனுமதி இல்லாத வகை ஆடைகளை அணிந்து வருபவர்கள் முற்றிலும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்ட நிலையில் சுமார் 150 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் எழுப்பி, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக மாணவிகள் கூறும் போது, முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து வருவதால் ஆண் விரிவுரையாளர்கள் கூச்சமடைவதாக, கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாக குறிப்பிட்டனர்.

போராட்டத்தையடுத்து ஆடைக்கட்டுப்பாட்டு விதியை கல்லூரி நிர்வாகம் தளர்த்தியதாக அறிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,278.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.