ஹிந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை தாங்க முடியாது! என்று தாய்மொழி உரிமைகளுக்காக இந்திய அமைச்சர் சதானந்த கவுடா முழக்கியிருப்பதை தமிழக மக்கள் வரவேற்கின்றனர். 30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை தாங்க முடியாது என இந்தியாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பு பெற்றுள்ள பாஜக அரசின் தொடர் வண்டித்துறை அமைச்சர், சதானந்த கவுடா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சதானந்த கவுடாவும் எதிர்த்துள்ளது இந்தியாவில், நிண்ட நெடுங்காலமாக மங்கச் செய்யப் பட்டிருந்த தாய்மொழிகள் உரிமைக்கு ஒரு திருப்பு முனையாகப் பார்க்கப் படுகிறது. தேசிய மொழிகளாக தமிழ், கன்னடம் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில், எட்டாவது அட்டவனையில் அங்கீகரிக்கப் பட்ட பின்னரும், ஹிந்தி நாளை மட்டும் கொண்டாடுகிற வழக்கம் அப்புறப்படுத்தப்பட்டு, அட்டவனை மொழிகள் 22க்குமான நாள் கொண்டாடும் முறை இதுவரை முன்னெடுக்கப் படாமல் இருக்கிறது. தற்போது அதற்கான விழிப்புணர்ச்சியை எதிர்மறை கருத்துப் பரப்புதல் மூலம் தொடங்கி வைத்துவிட்டார் அமித்சா. இந்தியாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பு பெற்றுள்ள பாஜக அரசின் உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்சா தனது கீச்சுப் பக்கத்தில், இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பல்வேறு மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், அவரவர் தாய்மொழியுடன், மக்கள், இந்தியையும் கற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவை அடையாளப்படுத்த ஹிந்தி உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். அமித்சாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி உட்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமித்சாவின் கருத்து பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்தியாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பு பெற்றுள்ள பாஜக அரசின் அமைச்சர் சதானந்த கவுடா, ஹிந்தி பொதுவான மொழி அல்ல என்றும், பிற மாநில மொழிகளுக்கு ஹிந்தி தலைமை தாங்க முடியாது எனவும் அதிரடியாக கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் வடிவேலுவாகிய பொன். ராதாகிருஷ்ணன், ‘இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் என மோடி கூறியிருக்கிறார். இதற்கு அவரைப் பாராட்ட வேண்டாமா? இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டாமா? தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று பேசியிருப்பதன் மூலம், எவ்வளவு அடிச்சாலும் தாங்கராண்டா இவன் ரொம்ப நல்லவேன்னு சொன்னாங்க என்ற வடிவேலின் நகைச்சுவை போல், அமித்சாவின் ஹிந்தித்திணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, தன்னுடைய கொத்தடிமைத் தனத்தை பறைசாற்றியுள்ளார். ஆனால், பாஜகவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், தாய்மொழி உரிமைக்காக முதுகை நிமிர்த்தியிருக்கும் கார்நாடகத்தைச் சேர்ந்த, சதானந்த கவுடாவுக்கு தமிழக மக்கள் பெருமித வணக்கம் செலுத்துகிறார்கள். வெல்க சதானந்த கவுடா அவர்களே! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,278.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



