Show all

ரூபாய் மதிப்பு மளமள சரிவு! விலைவாசிகள் உயர்ந்து, இந்திய மக்களின் செலவுகள் கட்டுகடங்காமல் போகும்: பொருளாதாரஅறிஞர்கள்

அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில், 28 காசுகள் சரிவை சந்தித்து, 71.88 ரூபாயாக உள்ளது.

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில், 28 காசுகள் சரிவை சந்தித்து, 71.88 ரூபாயாக உள்ளது. 

சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் மீது ட்ரோன் மூலம், தாக்குதல் நடத்தப்பட்டதும் இதற்கு காரணமாகும். சவுதி அரேபியா தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. எனவே அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான புகலிடங்களை நோக்கி முதலீட்டாளர்கள் ஓடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். 

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் தொழிற்சாலை மீதான சமீபத்திய தாக்குதல்கள் கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. விரைவில் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படாவிட்டால், இதுபோன்ற உயர்வு உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும், ஏனெனில் நுகர்வோர் செலவுகள் அதிகரிக்கும். 

இது உறுதியாக இந்தியாவை பாதிக்கும். ஏற்கனவே இந்தியாவில், பொருளாதாரம் சரிவடைந்துவருவதால் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும், என்று அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த வர்த்தக நிதி நிறுவனமான டிரிப் கேப்பிட்டலின் இணை நிறுவனரும் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான புஷ்கர் முகேவர் தெரிவித்தார். 

இந்தியா, அன்றாடம் செய்யும் எரிபொருள் இறக்குமதிக்காக, மற்ற மற்ற இறக்குமதிகளுக்காக செய்யும் செலவு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக ஒரு டாலருக்கு ரூ. 61 செலவிட்டிருந்தால், இந்தியா இப்போது ரூ. 71.5 ஐ வழங்க வேண்டும். இது 16 விழுக்காடு அதிகரிப்பு. பைக் முதல் சரக்கு வண்டிகள் வரை, எரிபொருள் தான் இந்தியாவின் அடிப்படையாக இருப்பதால் இது இந்தியாவின் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுகளுக்கும் காரணமாகும்; எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,279.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.