பைஞ்சுதை, மின்சாரம் உள்ளிட்ட எட்டு தொழில்துறைகளின் உற்பத்தி, கடந்த மாதத்தில் 8.5 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. 15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, பைஞ்சுதை, மின்சாரம் ஆகிய எட்டு தொழில்துறைகளின் உற்பத்தி, கடந்த மாதத்தில் 8.5 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதை தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் இத்தொழில்களின் உற்பத்தியில் மொத்தம் 17.8 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதை தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



